தற்போதைய செய்திகள்

அமைச்சர் க.பாண்டியராஜனுடன் பிரான்ஸ் தூதரக அலுவலர் சந்திப்பு

சென்னை

தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜனை நேற்று தலைமைச் செயலகத்தில் பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலர் கேத்ரின் ஸ்வார்டு மற்றும் சென்னையிலுள்ள பிரான்ஸ் தூதரக அலுவலர் புரூநோ பலேஷ், தூதரகத்தின் கலைத்துறையின் பிரதிநிதியான அபிநயா உதயக்குமார் மற்றும் குமரன் வளவனே ஆகியோர் சந்தித்து தமிழ் நாடகக் கலையினை தெருக்கூத்து வடிவில் உலகளவில் பரப்பிடவும் இதிகாசக் கதைகளை நாடக வடிவில் பரப்பிடுதல் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்ங. இக்கலந்துரையாடல் நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த கலைமாமணி மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற புரிசை துரைசாமி கண்ணப்பன் உடனிருந்தார்.

மேலும், தமிழக அரசின் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக் டோங்ரே, அருங்காட்சியகங்கள் துறையின் ஆணையர் எம்.எஸ்.சண்முகம், கலைப் பண்பாட்டுத்துறையின் இயக்குநர் கலை அரசி, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிரமீளா குருமூர்த்தி, தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ந.அருள் ஆகியோர் உடனிருந்தனர்.