காஞ்சிபுரம்

கூடுவாஞ்சேரியில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் – முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பங்கேற்பு

காஞ்சிபுரம்:-

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் கூடுவாஞ்சேரியில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.டி.பிரசாத் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் டி.கே.எம்.சின்னையா, தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் தளவாய் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மரகதம் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ.கள் கணிதா சம்பத், வி.எஸ்.ராஜி, வாசுதேவன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் எ.யஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வேலாயுதம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சி.விவேகானந்தன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன், ஒன்றிய கழக செயலாளர்கள் கவுஸ்பாஷா, அப்பாதுரை, தையூர் எஸ்.குமரவேல், கூடுவாஞ்சேரி பேரூர் கழக செயலாளர் டி. சீனுவாசன்,

மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் எம்.ஜி.கே.கோபிகண்ணன், முன்னாள் பாசறை செயலாளர் கஜா (எ) கஜேந்திரன், செங்கல்பட்டு நகர கழக செயலாளர் வி.ஆர் செந்தில்குமார், மாணவரணி நிர்வாகிகள் கே.பெரியார், குணசேகரன், சிவகுமார், ஜெயசந்திரன், தணிகைவேல், அக்னிசர்மன் வேலாயுதம், ராமநாராயணன், விஜயன், ரத்திஷ்குமார், செந்தில்குமார் பாபு, கன்னியப்பன், ராம்பிரசாத், ரவிகிருஷ்ணா, பாலாஜி, ஆனந்த்,கேசவலு, தேவராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.