தேனி

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைவராக ஓ.ராஜா பதவியேற்பு

தேனி

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைவராக ஓ.ராஜா, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

தேனியில் தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய புதிய தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நேற்று நடைபெற்றது. தேனி ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார் வரவேற்றார். இவ்விழாவிற்கு தலைமையேற்ற பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய புதிய தலைவராக ஓ.ராஜா, துணைத்தலைவராக செல்லமுத்து மற்றும் சோலைராஜ், வசந்தா நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை பால்வள துணைப்பதிவாளர் கணேசன், தேனி பால்வள துணைப்பதிவாளர் லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் பரிந்துரையின்படி 3 பேருக்கு மானியத்துடன் கூடிய ஆவின் பூத் அமைக்க ஆணை, மொத்த விற்பனையாளருக்கான ஆணை இருவருக்கும் அமைச்சர் வழங்கினார்.

முடிவில் தேனி ஆவின் துணை பொது மேலாளர் டாக்டர் சரவணமுத்து நன்றி கூறினார்.