தற்போதைய செய்திகள்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் – வி.வி.ராஜன் செல்லப்பா ஆலோசனை

மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருப்பாலை, அவனியாபுரம், வண்டியூர் ஆகிய மாநகராட்சி வார்டுகளில் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருப்பாலை, அவனியாபுரம், வண்டியூர் ஆகிய பகுதியை சேர்ந்த 29 வார்டுகள் மதுரை மாநகராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளன. இதில் 3700 பேரை பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். எனவே சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள்தான் தினந்தோறும் வாக்காளர்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்து கூறும் புனித பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், திருப்பாலை பகுதி செயலாளர் ஜீவானந்தம், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், வண்டியூர் பகுதி செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.