சிறப்பு செய்திகள்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் – துணை முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில்  மகாகும்பாபிசிஷேகம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரைசாலையில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயில் பழமை வாய்ந்தது. அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 9 கோபுரங்களும் வண்ணம் தீட்டப்பட்டு எழில் மிகு காட்சி அளித்தது.

காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் விமானம், கோபுரத்திற்கு பாலாலயம் விமானம் செய்யப்பட்டது. முன்னதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கும்பாபிஷேகத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிழக்கு திசையில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரம் 5 நிலை ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களில் கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.இந்த கும்பாபிஷேகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.