தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பாக ரூ.1 கோடியே 62 லட்சம் மதிப்பிலான புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்து 1802 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் தொழிற்கடன் உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் நா.மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தமிழகம் முழுவதும் 2011 முதல் 22.01.2020 வரை 91 லட்சத்து 60 ஆயிரத்து 351 நபர்களுக்கு ரூ.48960.76 கோடி பயிர்க்கடன் வழங்கியுள்ளது. நடப்பாண்டு 22.01.2020 வரை 10,01,729 நபர்களுக்கு ரூ.7,170.59 கோடி பயிர்க்கடன் வழங்கியுள்ளது. தருமபுரி மண்டலத்தில் 2,33,752 நபர்களுக்கு ரூ.1,211.49கோடி பயிர்க்கடனும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 1,06,535 நபர்களுக்கு ரூ.599.06கோடி மதிப்பில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தருமபுரி மண்டலத்தில் 22.01.2020 வரை 36,250 விவசாயிகளுக்கு ரூ.246.42 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 31.01.2020 வரை 14,632 நபர்களுக்கு ரூ.116.06 கோடி மதிப்பிலும் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
2016 முதல் தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 2 ஆயிரத்து 75 விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மண்டலத்தில் 133 சங்கங்கள் மூலம் 27,924 விவசாயிகளுக்கு ரூ.138.88 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 123 சங்கங்கள் வாயிலாக 13,599 விவசாயிகளுக்கு ரூ.86.70 கோடியும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2013-14 முதல் 31.12.2019 வரை காய்கறி பயிர் செய்யும் 4லட்சத்து 7 ஆயிரத்து 416 விவசாயிகளுக்கு ரூ.3,282.25 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மண்டலத்தில் காய்கறி பயிர் கடனாக ரூ.45.91 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் ரூ.53.71 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

பயிர்க்காப்பீட்டு இழப்பீடு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 31,43,970 விவசாயிகளுக்கு ரூ.7,238.74 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தருமபுரி மண்டலத்தில் 20,051 விவசாயிகளுக்கு ரூ.20.11 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 2217 விவசாயிகளுக்கு ரூ.1.07 கோடியும் பயிர்காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவுத்துறையின் மூலம் 2011 முதல் 31.12.2019 வரை மாநிலம் முழுவதும் 60,727 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.247.37 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தருமபுரி மண்டலத்தில் 2009 நபர்களுக்கு ரூ.5.24 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 1,360 நபர்களுக்கு ரூ.7.16 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நகைக்கடனாக 6 கோடியே 05 ஆயிரத்து 327 நபர்களுக்கு ரூ.2,30,371.79 கோடியும், தர்மபுரி மண்டலத்தில் 11,41,784 நபர்களுக்கு ரூ.3,875.78 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 5,73,651 நபர்களுக்கு ரூ.2,609.78 கோடியும் நகைக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

தானிய ஈட்டுக்கடனாக மாநிலம் முழுவதும் 2011 முதல் 31.12.2019 வரை 1,97,464 நபர்களுக்கு ரூ.2,450.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தர்மபுரி மண்டலத்தில் 2617 நபர்களுக்கு ரூ.50.59 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 654 நபர்களுக்கு ரூ.12.07 கோடியும் தானிய ஈட்டுக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

சிறுவணிகக்கடன் மாநிலம் முழுவதும் 2011 முதல் 31.12.2019 வரை 15,41,279 நபர்களுக்கு ரூ.1,866.66 கோடியும், தருமபுரி மண்டலத்தில் 19,806 நபர்களுக்கு ரூ.26.84 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 14,603 நபர்களுக்கு ரூ.22.94 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சிறுவணிகக்கடன் தொகை 10.09.2019 முதல் ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மண்டலத்தில் 15,86,842 நபர்களுக்கு ரூ.6,947.54 கோடியும், கிருஷ்ணகிரி மண்டலத்தில் 7,93,887 நபர்களுக்கு ரூ.4,763.06 கோடியும் அனைத்து வகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ரூ பற்று அட்டைகள் 2,89,729 நபர்களுக்கும், ரூபே விவசாய கடன் அட்டைகள் 3,70,554 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மண்டலத்தில் 8075 ரூபே பற்று அட்டைகளும், 6902 ரூபே விவசாய கடன் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மண்டலத்தில் 8,095 ரூபே பற்று அட்டைகளும், 6147 ரூபே விவசாய கடன் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 5,853 சங்கங்கள் ரூ.189.51 கோடி மதிப்பில் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 31.12.2019 வரை தமிழகம் முழுவதும் 652 சங்கங்கள் ரூ.76.38 கோடி மதிப்பிலும், கிருஷ்ணகிரியில் உள்ள தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 4 கிளைகள் ரூ.23.63 லட்சம் மதிப்பிலும், தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கியின் 8 கிளைகள் ரூ.66.90 லட்சம் மதிப்பிலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2011 முதல் 31.12.2019 வரை 5,10,600 மெ.டன் கொள்ளளவு கொண்ட 3879 கிடங்குகள் ரூ.489.62 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 165 கிடங்குகள் ரூ.42.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.