தற்போதைய செய்திகள்

உடுமலைப்பேட்டையில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை- அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தரம் உயர்த்தப்பட்ட பன்முக மருத்துவமனையை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துமனை வளாகத்தில் கால்நடைகளுக்கான தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட பன்முக மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்தாவது:-

கால்நடை பராமரிப்புத் துறையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் தெற்கு ஆசியாவிலேயே இல்லாத வகையில் நமது தமிழகத்தில் அம்மா அவர்களின் நல்லாசையுடன் முதலமைச்சரால் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டிலான சர்வதேச தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகின்ற 9.2.2020 அன்று நடைபெற உள்ளது. இத்தகைய புதிய திட்டம் நமது தமிழகத்தில் துவங்கப்பட உள்ளதால் கால்நடை வளர்ப்போர், விவசாய பெருங்குடி மக்கள் மாணவ, மாணவிகள் மிகுந்த பயன் அடைவர்கள்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

முன்னதாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பண்ணைக்கிணறு ஊராட்சி கோழிக்குட்டை பகுதியில் புதிய கால்நடை கிளை நிலையத்தினையும் மற்றும் பொன்னேரி ஊராட்சி, பொன்னேரியில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்தகத்தினையும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.