தற்போதைய செய்திகள்

மக்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் அம்மா அரசில் உடனே நிறைவேற்றம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்

தூத்துக்குடி:-

மக்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் அம்மா அரசில் உடனே நிறைவேற்றப்படுகிறது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ெபருமிதத்துடன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கி பேசியதாவது:-
அந்த காலத்தில் இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி கொடுத்தேன். இனி வருங்காலத்தில் இப்பள்ளியை கல்லூரியாக மாற்றுவதற்கும் நான் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

புரட்சித்தலைவி அம்மா அறிவித்த அத்தனை மக்கள் நலத்திட்டங்களை ஒன்றுவிடாமல் முதல்வரும், துணை முதல்வரும் நிறைவேற்றி வருகின்றனர். இந்தியாவில் தமிழகம் தான் கல்வியில் உயர்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கல்வித்துறைக்கு ஏராளமான திட்டங்களை வகுத்து வழங்கி வருகிறார்கள். அது மட்டுமல்ல தமிழக மக்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் அவற்றை உடனே நிறைவேற்றித் தரும் ஒரே அரசு அம்மாவின் அரசு தான்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்டக் கழக துணை செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான தங்க மாரியம்மாள் தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், கோவில்பட்டி நகர செயலாளர் விஜய் பாண்டியன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட ஆவின் பால் இயக்குனர் நீலகண்டன், இளையரசனேந்தல் கூட்டுறவு சங்கத் தலைவர் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.