தற்போதைய செய்திகள்

சேந்தமங்கலத்தில் ரூ.36 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் – அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்

நாமக்கல்

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ரூ.36 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தார் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு பூமிபூஜை நிகழ்ச்சி மற்றும் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி, கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் நபார்டு திட்டம், 14-வது மத்திய நிதிக்குழு திட்டம், தமிழ்நாடு நகர்புற உதவித்திட்டங்களின் கீழ் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளுக்கு பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்து, ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்து, 33 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் கடனுதவிகளை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி வழங்கினார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், திப்ரமாதேவியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிதிட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினையும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பட்டி ஊராட்சி, மேலப்பட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினையும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிமைப்பொருட்களை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

பின்னர், சேந்தமங்கலம் வட்டம், புதுக்கோட்டை, அம்பாயிபாளையம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின் கீழ் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக்கட்டடங்களை திறந்து வைத்து, 33 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் கடனுதவிகளையும், 11 சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகையினையும் அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சியில் ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் வசந்தபுரம் – வீரிபாளையம் சாலை தரம் உயர்த்தி மேம்பாடு செய்தல் பணியினையும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம், நபார்டு திட்டம், 14-வது மத்திய நிதிக்குழு திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், இடைவெளி நிரப்பும் நிதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் எருமப்பட்டி பேரூராட்சியில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் 13.700 கி.மீ நீள சாலைகள் அமைக்கும் பணிகளுக்கும்,

சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் 11.300 கி.மீ நீள சாலைகள் அமைக்கும் பணிகளுக்கும், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் ரூ.6.31 கோடி மதிப்பீட்டில் 9.500 கி.மீ நீள சாலைகள் அமைக்கும் பணிகளுக்கும், நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கும், சீராப்பள்ளி பேரூராட்சியில் ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் பி.தங்கமணி பூமிபூஜையிட்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத்துணைதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ரா.சாரதா, கழக அமைப்புச் செயலாளர் சேவல் எஸ்.ராஜூ உள்பட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.