தற்போதைய செய்திகள்

மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சென்னையில் கழகத்தினர் துப்புரவு பணி – தண்டையார்பேட்டையில் 12 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை

சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து கழகத்தினர் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இங்கு 12 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஆகியோரது வழிகாட்டுதலின்படி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டையில் (41-வது வடக்கு வட்டம்) மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து குப்பை கழிவுகள் அகற்றும் பணிகளை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான  ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் கழகத்தினர் ஈடுபட்டனர்.

சுகாதாரம் தூய்மையை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆர்.எஸ். ராஜேஷ், மாநகராட்சியின் குப்பை அள்ளும் இயந்திரத்தை இயக்கி சிவாஜி நகர், அம்மன் கோவில் தெரு, அஜீஷ் நகர், குமரன் நகர், உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள சகதிகள், மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றினார். இதில் 12 டன்னுக்கும் மேற்பட்ட குப்பை கழிவுகளை மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து 500 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு லாரிகளில் ஏற்றி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல சுகாதார துறை அதிகாரிகள், மற்றும் ஆர்.எஸ். ஜனார்த்தனம், ஏ.கணேசன், ஆர்.நித்யானந்தம், ஏ.வினாயகமூர்த்தி, எம்.நாகூர்மீரான், டி.ஜெ.சுரேஷ், இராமமூர்த்தி, வேல்முருகன், சந்தனசிவா, அண்ணா நகர் எம்.வேலு, ஏ.சேகர், மரக்கடை எம்.விஜி, வி.அலெக்ஸ், பி.பாபுராஜ், மாதவன், பிரசாத், எம். மாலா, டி.ஷகிலா, எல்.எஸ். மகேஷ்குமார், இஎம்எஸ் நிர்மல் குமார், இரா. முரளிமுருகன், டி.எம்.ஜி.பாபு, ஏ.ஜெயவேல், ஒ.ஏ.ரவிராஜன், எம்.ஷரிகிருஷ்ணன், டி.பிரபாகரன், எஸ்.மோகன், எம்.சேகர், ஆர்.செல்வம், எம். கவுனர்கான், மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழகத்தினர், மாவட்ட பிற அணி நிர்வாகிகள், மகளிரணியினர் உள்பட பலர் இருந்தனர்.