தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் செயல்களை அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

திருவாரூர்

தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு தான் தேர்தலை நடத்தவில்லை என தி.மு.க. திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது. தி.மு.க.வினர் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்களது எண்ணம் என்ன என்பது இப்போது அம்பலமாகி விட்டது. இதற்கு நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகளே சான்று ஆகும்.

மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம். தமிழகத்தின் நன்மைக்காகத்தான் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.