தற்போதைய செய்திகள்

சேவூர்- ஆதனூர் அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.5.43 லட்சத்தில் நுழைவு வாயில் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை

சேவூர் மற்றும் ஆதனூர் அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.5.43 லட்சத்தில் கட்டப்பட்ட நுழைவு வாயில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள 9 பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், ஆரணி கோட்டாட்சியர் மைதிலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அக்ராபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி, முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ச.வி.நகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, இரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி, இரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் நிதி உதவி மேல் நிலைப்பள்ளி, ஆரணி செயின்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட 9 பள்ளிகளில் மேல் நிலை முதலாம் ஆண்டு பயிலும் 673 மாணவர்கள் 1034 மாணவிகள், ஆக மொத்தம் 1707 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

மேலும் சேவூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ5.43 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நுழைவு வாயிலையும், ஆதனூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரூ5.43 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நுழைவு வாயிலையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடிதிருமால், பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், பட்டு கூட்டுறவு சங்கத்தலைவர்கள் சேவூர் ஜெ.சம்பத், பாலசந்தர், மாவட்ட துணை செயலாளார் டி.கருணாகரன், சேவூர் முன்னாள் தலைவர் பெருமாள், பிஎடிசி.உதயசங்கர், இரும்பேடு வேலு, கோபி, எஸ்.வி.நகரம் என்.வாசு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.