சென்னை

கொளத்தூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

சென்னை

தமிழ் மொழிக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூரும் வகையில் கொளத்தூர் கிருபா தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கொளத்தூர் காந்தி சிலை அருகே நடைபெற்றது. வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் டி.ஜி வெங்கடேஷ்பாபு, கொளத்தூர் கே. கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி மா.ராசு, தலைமை கழக பேச்சாளர்கள் இன்பதுரை, கோ.சமரசம், மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ புரசை வி.எஸ் பாபு, எ.எ.எஸ் முருகன், புரசை ராஜாராம், முனுசாமி, நடன சபாபதி, வில்லிவாக்கம் ஆர். மகேஷ்,பட்மேடு டி. சாரதி, லில்லிகல்பனா, சந்திரசேகர், வெற்றிநகர் ஜீவா, பி. மகேந்திரன், திருப்புகழ் நகர் அண்ணாமலை, சி.ராமச்சந்திரன், உஷா ராணி, வில்லிவாக்கம் ஜி.வேணு, சி.முனிரத்தினம், எ.பீட்டர், பீ.கே.சந்தர், ஜவஹர் நகர் செந்தில்குமார், பட்மேடு கே.ஜெயக்குமார், உமாபதி, செந்தில்நகர் முத்து, எஸ்.கே.முருகதாஸ், ஏரிக்கரை ராதாகிருஷ்ணன், டி.சி.விஜயகுமார், சிராலன், எஸ்.நாகப்பன், கே.சி.கார்டன் கே.பப்புலு, பிரபாகரன், வெற்றிநகர் பி.சுந்தர், காந்தி நகர் தினேஷ், தீட்டி தோட்டம் ஜெயராம், ஏரிக்கரை கார்த்திக், வில்லிவாக்கம் ஆர்ஜூன், சிட்கோ டி.விஜயகுமார், ஜெய் சுரேஷ், கொளத்தூர் சுஜி, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.