திருநெல்வேலி

இல்லம் தோறும் அம்மா பிறந்தநாள் விழா – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வேண்டுகோள்

திருநெல்வேலி

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவை இல்லம்தோறும் கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசியதாவது:-

மக்களின் மனங்களில் குடி கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை நம் இல்லம் விழா போல் சீறும் சிறப்புமாக நாம் கொண்டாட வேண்டும். நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு நாங்குநேரி தொகுதியில் கழக வேட்பாளரை 35000 வாக்குகளுக்கு மேல் பெற்று மாபெரும் வெற்றி பெற வைத்தனர். வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மாபெரும் வெற்றியை பெற்றுத் தரவேண்டும்.

அம்மாவின் பிறந்த நாளையொட்டி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பூக்களால் அலங்கரிக்கபட்ட மாலையுடன் அம்மாவின் படங்களை வைக்க வேண்டும். அவரவர் வசதிக்கேற்ப தெருவில் 10 பேருக்காவது வேஷ்டி, சேலை மற்றும் இனிப்பு வழங்க வேண்டும். மேலும் விளையாட்டு போட்டிகளையும் நடத்தி சிறப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசினார்.