இந்தியா மற்றவை

பீகாரில் அருண் ஜெட்லிக்கு சிலை – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு…

பாட்னா:-

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பீகார் மாநிலத்தில் சிலை அமைக்கப்படும். மேலும், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.