தற்போதைய செய்திகள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாபெரும் சாலைகள் திட்டங்கள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “மாபெரும் சாலைகள் திட்டங்களை” செயல்படுத்துவதற்கான தொடக்க நிகழ்ச்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “மாபெரும் சாலைகள் திட்டங்கள்” செயல்படுத்துவதற்கான தொடக்க நிகழ்ச்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று காலை சென்னை லீலா பேலஸ் கூட்டரங்கில் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமை தாங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து, நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள பெரிய மெகா சாலைகள் அனைத்திற்கும் சாலைகள் வடிவமைப்பு திட்டத்திற்கான வழிகாட்டுதல் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கான புத்தகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார். முன்னதாக, “மாபெரும் சாலைகள் திட்டங்கள்” குறித்து வைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.