இந்தியா மற்றவை

விநாயகர் சதுர்த்தி பண்டிகை – ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து…

புதுடெல்லி:-
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள டுவிட்டரில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள். விநாயக பெருமான் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் அருள வேண்டும் என வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.