சிறப்பு செய்திகள்

மாவட்ட கழக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை

சென்னை:-

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் கழக மனுக்கள் பரிசீலனைக் குழுவை சேர்ந்த கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கழக அமைப்பு செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., கழக அமைப்பு செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன், கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழக செயலாளரும்,

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் காலை திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,

முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், மாவட்ட அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி கழக செயலாளர்கள் மற்றும் முக்கிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெற்றது. பிற்பகல் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, வடசென்னை வடக்கு கிழக்கு, வடசென்னை வடக்கு மேற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, வடசென்னை தெற்கு ஆகிய மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டங்களில் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.