தற்போதைய செய்திகள்

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு புரட்சித்தலைவி அம்மா பெயர் – கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு புரட்சித்தலைவி அம்மா பெயர் சூட்ட வேண்டும் என்று கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி தலைவர் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கழகத்தின் காவல் தெய்வம், ஒன்றரை கோடி கழக தொண்டர்களின் இதய தெய்வம், மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை அம்மா அவர்கள் வாழ்ந்தபோது அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி முதல் மே மாதம் கடைசி நாள் வரை தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியிலும் கிளை கழகம தொட்டு மாவட்ட கழகம், சார்பு அமைப்புகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், கழக தொண்டர்கள் என்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சுமார் 1 கோடி ரூபாய் வரைக்கும் தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களக்கு நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம். உலகத்தில் எந்த ஒரு தலைவருக்கும் இப்படி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது இல்லை. இனியும் அப்படி ஒரு தலைவர் பிறக்கப் போவதும் இல்லை.

அந்த வகையில் அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை ஏழை, எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விதமாக கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள கழக நிர்வாகிகளையும், மாவட்ட கழக செயலாளர்களையும், அமைச்சர்களையும் அழைத்து அம்மா அவர்கள் ஆன்மா சாந்தி அடைய திருக்கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள், முதியோருக்கு தேவையான உதவி பொருட்கள், ஓட்டுநர்களுக்கு சீருடை முதலிய நலத்திட்டங்கள் வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்டா மாவட்டத்தை சேர்ந்த தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து நாங்களும் சாமானிய விவசாயிகள் தான் என்று நிரூபித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கியபோது எதிர்க்கட்சியினர் இது நாடாளுமன்ற தேர்தலுக்காக வழங்குகிறார்கள், அடுத்த ஆண்டு வழங்க மாட்டார்கள் என்று கேலி அரசியல் செய்தார்கள். அவர்கள் முகத்தில் கரியை பூசியது போல் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு பையுடன் ரூ.1000 வழங்கிய முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின்சார்பில் மனமார்ந்த பாராட்டும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி பேசியபோது எனக்கு பின்நாளும் இந்த இயக்கமும், இந்த ஆட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும் என்ற வேத வாக்கை மெய்பிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு நாயகன், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், குடிமராமத்து நாயகன் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் கழகத்தின் இரு கண்களாக செயல்பட்டு இந்தஇயக்கத்தையும், அம்மா அவர்கள் அமைத்த இந்த ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வரும் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஒவ்வொரு முறையும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தீட்டியும், குறிப்பாக மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு பல திட்டங்களை வழங்கிய தமிழக பெண்களின் குலசாமியாக வாழ்ந்த அம்மா அவர்களின் திருப்பெயரை சென்னை எழும்பூரில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மகப்பேறு மருத்துவமனை எனறு பெயர் சூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரையும் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் சார்பில் பணிந்து வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அரசின் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புதியதாக கடந்த 28.1.2020 அன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரும் இணைந்து துவக்கி வைத்த தமிழகத்தில் உள்ள ஏழை, எளியோருக்கு இலவச புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் அதிநவீன கருவி அமைந்துள்ள வளாகத்திற்கு பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை சிறப்பு புற்றுநோய் சிகிச்சை வளாகம் என்று பெயர் வைக்கவும், சத்துணவு தந்த சரித்திர நாயகர், பசிபிணி போக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருப்பெயரை சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் பல்நோக்கு மருத்துவமனை என்று பெயர் வைக்கவும், முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இருகரம் கூப்பி பணிந்து வணங்கி கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு சம்பளம் வாங்காத குறைந்த படிப்புகளே படித்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அதிகமாக உள்ள வாகன ஓட்டுநர்கள் அனைவரின் நலனுக்காக தமிழ்நாடு ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் நல வாரியம் என்ற பெயரை அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர் நல வாரியம் என்று பெயர் மாற்றி அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசாங்க சம்பளம் வாங்காத ஓட்டுநர்கள் நலனுக்காக பல்வேறு நல திட்டங்களையும் அம்மா அவர்கள் அறிவித்தார். ஆனால் அதிகாரிகளின் மெத்தன போக்கால் அரசின் நலத்திட்டங்கள், ஓட்டுநர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே அதற்கு வாரிய தலைவரை நியமித்து அரசாங்கத்தின் திட்டங்களை அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு வழங்கி அதன் மூலம் வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பொதுமக்களை அதிகம் சந்திக்கும் ஓட்டுநர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அவர்கள் கண்டிப்பாக கழகத்திற்காக பிரச்சாரம் செய்வார்கள் என்றும் முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பணிந்து கேட்டுக் கொள்கிறது.

2016 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்தை அம்மா அவர்கள் செய்தது போல் வரும் 2021 பொதுத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக கழக ஆட்சி தொடரவும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் சார்பில் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கையேடுகள் வழங்கியும், முதமுதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் அனுமதி பெற்றும், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்களிப்போடு மாநிலம் முழுவதும் எல்.இ.டி. வண்டிகள் மூலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா நடித்த திரைப்படங்களை கிராமங்கள் தோறும் பொதுமக்களுக்கு காண்பித்தும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் மகத்தான சாதனை திட்டங்களை இடைவேளையில் காண்பித்தும் பொதுமக்களிடம் கேள்விகள் கேட்டு சரியான பதில்கள் சொல்லும் பொதுமக்களுக்கு அந்த இடத்திலேயே பரிசு வழங்குவது என்று கழக அமைப்பு சரா ஓட்டுநர்கள் அணியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சிறிய வாகனங்களை வைத்து (ஆட்டோ, டாடா ஏஸ்) சுய தொழில் செய்யும் ஓட்டுநர்கள் தினசரி சம்பாதிக்கும் சில நூறுகளை செலவு செய்து விட்டு ஆண்டுக்கு ஒருமுறை வாகனத்திற்கு தகுதி சான்று, வாகனத்திற்கு காப்பீடு பெறுவதற்கான தொகை சுமார் பத்தாயிரம் தேவைப்படும் இந்த பணத்தை மேற்கண்ட வாகன ஓட்டுநர்கள் கந்துவட்டிக்கும், அதிக வட்டிக்கும், தனியாரிடம் வங்கி திரும்ப செலுத்துவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

இந்த நிலையை மாற்ற ஆந்திரா அரசு தற்போது வழங்குவது வோல் தமிழ்நாடு அரசும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை மானியமாகவோ அல்லது வட்டியில்லா கடனாகவோ கொடுத்து மாதா மாதம் ரூ.1000 வீதம் திரும்ப பெறும் வகையில் பண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரையும் கருணையுடன் பரிசீலனை செய்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதன் முலம் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மத்தியில் அரசுக்கு மேலும் நல்ல பெயர் ஏற்படும் என்றும் கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி உறுதியுடன் பணிந்து கேட்டுக் கொள்கிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா நடித்த திரைப்படங்களின் பிலிம் ரோல்கள் தற்போது தமிழகத்தில் இல்லை. இதற்கு காரணம் சினிமா டிஜிட்டல் முறைக்கு மாறி விட்டது. தலைவர், அம்மா நடித்தபோது சொன்ன கருத்துக்கள் பொதுமக்களின்இதயத்தில் இடம்பிடித்தது. இதன் மூலம் பேரறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானார் என்று பேரறிஞர் அண்ணாவே 1967-ல் பதவியேற்றபின் தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவரையும், அம்மா அவர்களையும் தமிழக முதலமைச்சர்களாக தமிழக மக்கள் அரியணையில் அமர்த்தி அழகுபார்த்தார்கள்.

இந்த படங்களின் நெகட்டிவ் பிலிம்கள் அனைத்தும் அந்த காலத்தில் 1 காப்பியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்திய பிலிம் இன்ஸ்டிடியூட்டிற்கு தர வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு படி மேற்கண்ட படங்கள் புனேவில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்களின் செல்லப் பிள்ளைகளான முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவும் ஆலோசித்து அந்த படங்களின் காப்பியை பெற்று தற்போது உள்ளது போல் டிஜிட்டல் முறைக்கு கலர் திரைப்படங்களாக மாற்றி இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படங்களை கண்டிப்பாக தமிழக திரை அரங்குகளில் வருடத்திற்கு குறைந்தபட்சம் பல கட்டங்களாக 2 மாதத்திற்காவது பழைய படங்களை திரையிட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டு பொதுமக்களிடம் நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்குமாறு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஆகியோரை கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி பணிந்து இருகரம் கூப்பி வேண்டி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.