தற்போதைய செய்திகள்

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.58 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருப்பூர்

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.58 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வகையான வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி உடுமலைப்பேட்டை வட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொங்கல் நகரம் ஊராட்சி கொங்கல் நகாில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கொங்கல் நகரம் வடக்கு விநாயகர் கோவில் முதல் ராவாணாபூரம் கோழிக்குட்டை பி.ஏ.பி வாய்க்கால் வரையிலான சாலை மேம்பாடு செய்யும் பணி, கொண்டம்பட்டி ஊராட்சி எஸ்.வல்லகுண்டாபூரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எஸ்.வல்லகுண்டாபூரம் முதல் மசக்கவுண்டன்பூதூர் வரையிலான சாலை மேம்பாடு செய்யும் பணி,

ஆத்துக்கிணத்துப்பட்டி ஊராட்சி ஆத்துக்கிணத்துப்பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தூங்காவி சாலை முதல் பூளவாடி சாலை வரையிலான சாலை மேம்பாடு செய்யும் பணி, குடிமங்கலம் ஊராட்சி குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பொள்ளாச்சி – தாராபூரம் சாலை தெற்கு பேருந்து நிறுத்தம் முதல் ஊராட்சி எல்லை வரையிலான சாலை மேம்பாடு செய்யும் பணி,

மத்திய நிதிக்குழு மானிய திட்டம் 2019-2020 ன் கீழ் சோமவாரப்பட்டி ஊராட்சி சோமவாரப்பட்டியில் ரூ.17.60 லட்சம் மதிப்பீட்டில் சோமவாரப்பட்டி முதல் அம்மா பட்டி வரையிலான சாலை பலப்படுத்தும் பணி, வடுகபாளையம் ஊராட்சி லிங்கம நாயக்கன் பூதூரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெதப்பம்பட்டி – செஞ்சேரிசாலை முதல் பெதப்பம்பட்டி எல்லப்பநாயக்கன் பூதூர் சாலை வரையிலான சாலை மேம்பாடு செய்யும் பணி மற்றும் ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் குடிமங்கலம் ஊராட்சி கொள்ளுபாளையத்தில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் பொள்ளாச்சி – தாராபூரம் சாலை மேம்பாடு செய்யும் பணி என குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.358.60 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மேலும் அவர் இத்திட்டபணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், செயற்பொறியாளர் சேகர், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாண்டியன், மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், குடிமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சுகந்தி முரளி, துணைத் தலைவர் புஷ்பராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்டன் (குடிமங்கலம்), உதவி பொறியாளர்கள் ரஞ்சித், சுப்பிரமணி, தொடக்க வேளாண்மை கூட்டு சங்க தலைவர்கள் அன்பர்ராஜன், செல்வராஜ், தொடக்க வேளாண்மை கூட்டு கடன் சங்க துணை தலைவர் ராமநாதன், வார்டு கவுன்சிலர் முருகன், எல்.டி.டி.வங்கி துணை தலைவர் நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஸ்வநாதன், விமலா, கலைச்செல்வி, சவுந்தர்ராஜ், சம்பத் குமார், உமாதேவி, ஊராட்சி கழக செயலாளர்கள் சதாசிவம், ரங்கசாமி, முருகானந்தம், பத்மநாதன், கொழுமம் தாமோதரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.