தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் 100 ஜோடிகளுக்கு இலவச – திருமணம் திரூவாருர் மாவட்ட கழகம் முடிவு

திருவாரூர்

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் 100 ேஜாடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க திருவாரூர் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து திருவாரூர் மாவட்ட கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் திருவாரூர் ஆரூரான் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் கோ.அருணாசலம் தலைமை வகித்தார். அதிமுக அமைப்பு செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். இதில் திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்காமராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் திருவாரூரில் அமைந்துள்ள அம்மா அரங்கில் 100 ஜோடிகளுக்கு 65 வகையான சீர்வரிசை பொருள்களுடன் திருமணம் செய்து வைப்பது, காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விரைவில் நடைபெற உள்ள நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கழகம் 100 சதவீதம் வெற்றி பெற அயராது பாடுபட சூளுரை ஏற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்றார். இறுதியில் ஒன்றிய செயலாளர் பி.கே.யு.மணிகண்டன் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக இணை செயலாளர் பாப்பாத்தி மணி, மாவட்ட கழக பொருளாளர் பன்னீர்செல்வம், முன்னாள் நகரமன்ற தலைவர் மன்னார்குடி சிவா ராஜமாணிக்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகிராம், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பு, ராம குணசேகரன், சேகர், சங்கர், ஜீவானந்தம், ஹரிகிருஷ்ணன், நகர கழக செயலாளர்கள் பசீர் அகமது, சண்முகசுந்தரம் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.