திருவள்ளூர்

மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வது அம்மா வழி நடக்கும் கழக அரசு – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. பெருமிதம்

திருவள்ளூர்

மக்களின் அடிப்படை தேவைகளை அம்மாவின் வழிநடக்கும் கழக அரசு உடனடியாக பூர்த்தி செய்து வருகிறது என்று வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தொகுதி கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், காந்திநகர் உட்பட்ட பல்வேறு தெருக்களில் ரூ. 5 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.அலெக்சாண்டர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், அம்பத்தூர் மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர்கள் பாண்டியன் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜ், பகுதி கழக அவைத்தலைவர் கிருஷ்ணன், டன்லப் வேலன், மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி.மைக்கேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி கே.பி.முகுந்தன், வட்ட செயலாளர் ரவி, துணை செயலாளர் கள்ளிக்குப்பம் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி தீபா சியாளம், நிர்வாகிகள் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தார்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

அம்மா அவர்களின் ஆசியுடன் அம்மா அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்பாக செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்பத்தூர் தொகுதி மக்கள் மீது தனி கவனம் செலுத்தி தரமான சாலைகள், உயர்தரமான எல்.இ.டி. விளக்குகள் என முன்மாதிரி சட்டமன்ற தொகுதியாக மாற்றி வருகிறார்கள்.

நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக மாறிய அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்பத்தூரை பொறுத்தவரை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பல சீரிய திட்டங்களை செயல்படுத்தி தந்துள்ளார். பொதுமக்களின் தேவைகளை ஆளும் அம்மாவின் அரசு உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறது.

இவ்வாறு வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. கூறினார்.