தற்போதைய செய்திகள்

அரசின் சாதனைகளை விளக்கி கூறி கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுங்கள் – நிர்வாகிகளுக்கு அமைச்சர் பா.பென்ஜமின் வேண்டுகோள்

காஞ்சிபுரம்

அரசின் சாதனைகளை விளக்கி கூறி கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என்று கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் பா.பென்ஜமின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகம் சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஏற்பாட்டில் மாமண்டூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக அவை தலைவர் கே.என்.ராமசந்திரன் தலைமை வகித்தார். இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தை பொறுத்தவரை 4 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிறப்பு மிக்க மாவட்டமாகும். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் கழகம் இமாலய வெற்றி பெற இந்த ஆலோசனை கூட்டத்தில் உறுதிக்கொண்டு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அம்மாவின் பிறந்தநாளில் அங்காங்கே கழக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கழக அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புடன் கொண்டாட வேண்டும். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற்றிட இந்த ஆலோசனை கூட்டத்தில் நாம் உறுதிகொள்வோம். வென்று முடிப்போம்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.