வேலூர்

கழக வேட்பாளர் வெற்றி பெற்றால் புதிய திட்டங்களால் வேலூர் ஜொலிக்கும் – தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பிரச்சாரம்…

வேலூர்:-

கழக வேட்பாளர் வெற்றி பெற்றால் புதிய திட்டங்களால் வேலூர் ஜொலிக்கும் என்று சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி.குப்பம் தொகுதியில் ஜாபர்பேட்டை ஊராட்சியில் வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அம்மாவின் வழியில் கழக அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை தினந்தோறும் வழங்கி வருகிறது மக்களை காக்கும் கழகத்திற்கு வெற்றி தேடி தாருங்கள் என்று சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் எம் .எல்.ஏ. பேசினார்.

சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் எம் .எல்.ஏ. பேசியதாவது:-

மக்களால் நான், மக்களுக்காக நான் என வாழ்நாளெல்லாம் மக்கள் நலனுக்காக திட்டங்களை வழங்கியவர் அம்மா. அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே .பழனிசாமி அவர்கள் நல்லாட்சி நடத்தி வருகிறார்.கே.வி.குப்பம் தொகுதி கிராமப்புறங்கள் அதிகமுள்ள தொகுதி. ஜாபர்பேட்டை ஊராட்சியில் அம்மாவின் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிருக்கு தாலிக்கு தங்கத்துடன் ரொக்கம், மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள், கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, அம்மா குழந்தைகள் நல பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது. முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

புதிய தாலுகா உருவாக்கப்படும் போது ஜாபர்பேட்டை ஊராட்சி பகுதி மேலும் மேம்படுத்தப்படும். கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி. கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற பின்பு ஜாபர்பேட்டை ஊராட்சிக்கு பல புதிய திட்டங்கள் கிடைக்கும். அம்மாவின் அரசுக்கு நல்லாதரவு தந்து கழக வேட்பாளரை மாபெரும் வெற்றியடைய செய்ய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் எம் .எல்.ஏ. பேசினார்.

நிகழ்ச்சியில் பெருந்துறை ஒன்றியக் கழக செயலாளர் விஜயன் (எ) ராமசாமி, ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் சி.டி.ரவிச்சந்திரன், பெருந்துறை சங்கர், சி.எம்.தீனதயாளன், சரண், மனோஜ்,ஈங்கூர்மணி, பழனிசாமி, பி.சுப்பிரமணி, பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்