விருதுநகர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராஜவர்மன் எம்எல்ஏ ஆய்வு…

விருதுநகர்:-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி கல்லமநாயக்கர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராஜவர்மன் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அம்மா பேரவை மாநில துணை செயலாளர் சேதுராமானுஜம், வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், ராமராஜ் பாண்டியன், வேல்முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையில் குழந்தை பிறந்த பெண்களுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார். மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் அறை உள்நோயாளிகள் அறை வெளிநோயாளிகள் அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் தமிழக அரசு கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிகள் முழுமையாக கிடைக்க அரசு மருத்துவமனைகள் கடந்த 5 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை, அம்மா பரிசு பெட்டகம், உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்றார்.

அதன்பின்னர் மருத்துவ அலுவலர் செல்வராஜிடம் நோயாளிகளிடம் மனிதநேயத்துடன் பணியாற்றுங்கள். கூடுதல் பணியாளர்கள் தனி ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட வசதிகளை சுகாதாரத்துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் நேரில் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கூறினார். மேலும் கூடுதல் படுக்கை வசதி கட்டிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளதால் நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அரசு சலுகைகளை பெற்று தர தயாராக இருப்பதாகவும் ராஜவர்மன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.