சிறப்பு செய்திகள்

மூக்கையா தேவர் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் மரியாதை…

மதுரை:-

பி.கே.மூக்கையா தேவரின் 40-வது குரு பூஜையை முன்னிட்டு உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காகபாடுபட்டவரும், அப்பகுதி மக்களுக்கு கல்வி கிடைக்கும் வண்ணம் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் பி.கே.மூக்கையாத்தேவர். அவரது நினைவுநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந்தேதி குருபூஜை விழா நடைபெறும்.

அதன்படி 40- வது ஆண்டு குருபூஜை விழா உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில்  நடைபெற்றது. கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மூக்கையா தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து அங்கிருக்கும் மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.