தற்போதைய செய்திகள்

தமிழகம் முழுவதும் திண்ணை பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்தி புதிய வெற்றிச் சரித்திரம் படைக்க கழக இலக்கிய அணி சூளுரை

சென்னை

தமிழகம் முழுவதும் திண்ணை பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் நடத்தி புதிய வெற்றிச் சரித்திரம் படைக்க இலக்கிய அணி சூளுரை ஏற்றுள்ளது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக இலக்கிய அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவருமான பா.வளர்மதி தலைமை வகித்தார்.

தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நீங்காது, முழுமதியாக இதய தெய்வமாக இடம் பிடித்திருக்கும் தமிழர்களின் காவல் தெய்வம் அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை, இப்பூவுலகில் அவதரித்த திருநாளை ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி “இலக்கிய விழாவாக” கடைப்பிடிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் விரோத தி.மு.க தமிழக மக்களை திசை திருப்பி, ஏமாற்றி பெற்ற வெற்றியை மக்களிடம் எடுத்து சென்று நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மாபெரும் வெற்றியையும் அதனை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை தமது அயராத முயற்சியால் முறியடித்து, தமிழகத்தில் அதிக இடங்களில் கழகத்தை வெற்றி பெற செய்த கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களுக்கு கழக இலக்கிய அணி பாராட்டுதல்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

புரட்சிச்செம்மல் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அளிக்கப்படும் வாக்குறுதிகளை, உறுதியாகவும், உடனுக்குடனும், செயல்படுத்திடும் வகையில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி, உள்கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி தந்து தனது அரசு அம்மாவின் உண்மையான தொடர்ச்சி என்பதனை மீண்டும் மீண்டும் நிரூபித்து சிறப்பான மக்கள் நல அரசாக வெற்றிநடை போட காரணமாக விளங்குகின்ற தமிழக முதல்வர் புரட்சிச் செம்மல் எடப்பாடியாருக்கும், அவரது தலைமையிலான அரசிற்கும் கழக இலக்கிய அணி பாராட்டுகளையும், நன்றிகளையும் மனதார தெரிவித்து மகிழ்கிறது.

ஒரு வல்லரசின் அதிபர் வருகை தந்து இரண்டு நாட்கள் தங்கி சாலை வழியாக நெடுந்தொலைவு பயணம் செய்து மன நிறைவுடன் தாயகம் திரும்பி இருக்கும் நிகழ்வு முதலமைச்சர் புரட்சிச்செம்மல் எடப்பாடியார் தலைமையிலான தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் சிறப்பான மாநிலமாகத் திகழ்வதனால் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க “சீன அதிபர்- பாரதப் பிரதமர் சந்திப்பு” வெற்றிகரமாக நடைப்பெற்றிருக்கிறது.

உலகப் பெருந்தலைவர்கள் சந்திக்க சிறந்த இடம் புரட்சிச்செம்மல் எடப்பாடியார் தலைமையிலான தமிழ்நாடு என்ற பெருமிதத்தை பறைசாற்றும் வகையில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படுவதிலும், தொன்மைச் சிறப்புகளை எடுத்து இயம்புவதிலும், அன்பான வரவேற்பு, அற்புதமான விருந்தோம்பல் முறைகளிலும் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் அம்மாவின் அரசை தலைமையேற்று பார் புகழ வழிநடத்தி வருகின்ற, சரித்திரம் படைத்த சாமானிய முதல்வராக திகழ்கின்ற புரட்சிச்செம்மல் எடப்பாடியாருக்கும், அவர் தலைமையிலான அரசிற்கும் கழக இலக்கிய அணி கோடான கோடி நன்றிகளை காணிக்கையாக்கி பாராட்டி மகிழ்கிறது.

தமிழ்நாட்டை தொழில் வளமிக்க மாநிலமாக மாற்றி தொழில்துறையில் சிறந்து விளங்கிட உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியும், இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, நேரிலே சென்று உலகப்புகழ் பெற்ற முதலீட்டார்களையும், தொழில் நிறுவனங்களையும் சந்தித்து பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கும் முதலமைச்சர் புரட்சிச்செம்மல் எடப்பாடியாருக்கும், துணை முதலமைச்சர் பாண்டி நாட்டு தங்கம் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக இலக்கிய அணி தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் மகிழ்கிறது.

இந்திய திருநாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறந்த மாநிலமாக தாய் தமிழ்நாடு விளங்கும் வகையில் மாநில முழுவதும் புதிதாக ஒன்பது மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளும் உருவாகவும், தற்போது மீண்டும் இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளும் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறெந்த மாநில அரசும் செய்து காட்ட முடியாத வெற்றி சரித்திரம் இது என மாற்றாரும் இன்று பாராட்டி கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணமான தமிழக முதல்வர் புரட்சிச்செம்மல் எடப்பாடியாருக்கு கழக இலக்கிய அணி தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான “காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக” அறிவித்து காவேரி டெல்டா பகுதியிலுள்ள 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நலனை பாதுகாத்து அவர்களின் எண்ணங்களையெல்லாம் ஈடேற்றிய, உழவர் நலன் காத்த உழவனாக, தமிழ் இனம் போற்றும் முதல்வனாக, உழவன் மகிழ்ந்தால் உலகமே மகிழும் என்ற கருத்தை நிலைநாட்டிய முக்கடல் சூழ்ந்த பாரதத்திற்கு முன்மொழிந்த முதல்வர் புரட்சிச்செம்மல் எடப்பாடியாருக்கு கழக இலக்கிய அணி தனது நன்றி மலர்களை அவரது பொற்பாதங்களில் சமர்பித்து பெருமை கொள்கிறது.

சேலம் மாவட்டம் தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.1022 கோடி மதிப்பிலான சர்வதேச தரத்தில் அமையவும், அங்கு மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வகையில் கல்லூரி நிறுவிட திட்டம் தொடங்கியதற்கும், சென்னை போன்ற நகர்ப்புறங்களில் மட்டுமே தரமான மைதானங்களில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டுகளை கிராமப்புற ஏழை மாணவர்களும் தன்திறனை வெளிப்படுத்தும் வகையில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனால் ஏற்படுத்தப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து கிராமப்புற ஏழை மாணவர்களும் உயர்தரமான விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதற்கும் ஐ.பி.எல் போன்ற சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கும் உத்தரவாதம் தந்த தமிழக முதல்வர் புரட்சிச்செம்மல் எடப்பாடியாருக்கு கழக இலக்கிய அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது.

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தி வரும் புரட்சிச்செம்மல் எடப்பாடியார் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும், மாண்புகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தலைமைக் கழக பேச்சாளர்களுக்கும், இலக்கிய அணியின் மாநில, மாவட்ட செயலாளர்களுக்கும், தலைமை கழக நிர்வாகிகளையும் மற்றும் இலக்கியவாதிகளையும் கொண்டு சிறப்பாக பேசுவதற்கு பயிற்சி அளிக்க “பயிற்சிப் பட்டறை” நடத்திட கழக இலக்கிய அணி, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் ஆகியோரையும் அனுமதி தர தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது அவதார திருநாளை முன்னிட்டு அதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் கழக இலக்கிய அணியின் சார்பாக கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றை நடத்தியும், ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியும் சிறப்பான முறையில் ஆண்டு முழுவதும் கொண்டாட உறுதி கொள்கிறது.

அம்மாவின் வழி நடக்கும் முதலமைச்சர் புரட்சிச்செம்மல் எடப்பாடியார் தலைமையிலான அரசின் சரித்திர சாதனைகளை துண்டு பிரசுரங்கள் மூலமாக வீடு வீடாக எடுத்துச் செல்லவும், தொடர் சாதனை விளக்க திண்ணை பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் தமிழகமெங்கும் நடத்திக்காட்டி, வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும், அனைத்து தொகுதிகளிலும் கழகம் மகத்தான வெற்றி பெற்றிட கழக இலக்கிய அணியின் விசுவாசமிக்க தொண்டர்கள் ஊன் உரக்கம் பாராது, சோர்வின்றி களத்திலே அயராது உழைத்து மக்கள் பணியாற்றி “புதிய வெற்றி சரித்திரம்” படைத்திட இக்கூட்டத்தின் வாயிலாக கழக இலக்கிய அணி சூளுரை ஏற்கிறது.