திருவண்ணாமலை

ஆரணி எஸ்.வி.நகரம் அணைக்கட்டு ரூ.90 லட்சம் மதிப்பில் புனரமைப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கமண்டலநாக நதியில் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டை குடிமராத்து திட்டத்தின் கீழ் ரூ.90லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இப்பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அணைக்கட்டில் தடுப்பு சுவருக்கு கான்கிரீட் வெளிப்புற சுவர் அமைத்தல், தலைப்பு மதகு சீரமைத்தல், மணற்போக்கி மதகு சீரமைத்தல், பழுதடைந்துள்ள ஷெட்டர்களை சீரமைத்தல், வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் தூர்வாருதல், அணைக்கட்டில் பழுதடைந்துள்ள ஏப்ரான் பகுதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் ஆரணி வட்டத்தில் உள்ள மாமண்டூர், லாடப்பாடி, கல்பூண்டி, மேல்சீசமங்கலம், திருமணி பெரிய ஏரி, திருமணி அட்டவணை ஏரி, திருமணி சித்ததேரி, திருமணி புதுஏரி, மேல்புத்துஸர், முனுகப்பட்டு, சோழம்பட்டு அன்மருதை, ஆகிய ஏரிகளுக்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள வாழைப்பந்தல், சொரையூர், பொன்னாமங்கலம், மேல்புதுப்பாக்கம் புது ஏரி, மாம்பாக்கம் ஏரி, அரூர் ஏரி, உள்ளிட்ட 22ஏரிகளுக்கு நீர் ஆதாரம் பெருகி அவற்றின் மூலம் 3356 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் முருகேசன், அரசு வழக்கறிஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், எ.அசோக்குமார், எம்.வேலு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் அ.கோவிந்தராசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ப.திருமால், முன்னாள் தலைவர் வாசு, சுபான்ராவ் பேட்டை வேலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.