தற்போதைய செய்திகள்

திமுக 18 ஆண்டுகள் செய்ய முடியாததை முதலமைச்சர் 10 நாளில் சாதித்துள்ளார் – அமைச்சர் சி.வி.சண்முகம் பெருமிதம்

சென்னை

திமுக 18 ஆண்டுகள் செய்ய முடியாததை முதலமைச்சர் 10 நாளில் சாதித்துள்ளார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

இங்கு திமுக மற்றும் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்கள், அடிப்படையிலே இந்த சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்று கேட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எரிவாயு எடுத்தல் தொடர்பாக குஜராத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டதைப் பற்றி இங்கே குறிப்பிட்டு இங்கு பேசினார். எரிவாயு என்பது மத்தியப் பட்டியலில் வருவதால், அது நீதிமன்றத்தால் செல்லாது என்று சொல்லப்பட்டது. ஆனால், இங்கே விவசாயம் என்பது, ஏழாவது அட்டவணையில், இரண்டாவது பட்டியலான மாநில பட்டியல் 14-வதில், விவசாயம், விவசாயம் சார்ந்த கல்வி, பூச்சிக்கொல்லி இது அனைத்தும் முழுக்க, முழுக்க மாநிலத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறது. ஆகவே, நாம் இப்பொழுது இயற்றியிருக்கக்கூடிய சட்டத்தின் பெயர் Protected Agricultural Development Zone குறிப்பாக, ஹைட்ரோகார்பன் போன்ற, விவசாயத்தை பாதிக்கக்கூடிய திட்டங்கள் வரக்கூடாது என்பது தான் நம் அனைவரின் நோக்கம்.

ஆனால், அதை நேரடியாக நாம் அதை இந்தச் சட்டத்தில் சேர்த்தோமென்றால் அது மத்திய அரசாங்கத்தினுடைய சட்டத்தோடு மோதுகின்ற ஒரு நிலை வரும். ஆகவே தான், அதில், Envionment industries என்று எதையும் சேர்க்காமல், முழுக்க, முழுக்க, டெல்டா மாவட்டங்களில் தற்போது இருக்கின்ற விவசாய நிலங்கள் விவசாயத்திற்காக பாதுகாக்கப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும், விவசாயத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், பயிற்சிகளையும் செய்ய வேண்டுமென்பது தான் நோக்கம், அந்த நோக்கக் காரணங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இந்த சட்டம் இயற்றுவதற்கு மாநிலத்திற்கு முழு அதிகாரம் இருக்கின்றது. அடிப்படையிலே நமக்கு ஒருசட்டம் தேவை, அந்த சட்டத்தை இன்றைக்கு முதலமைச்சர் சரித்திர திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். இந்தச் சட்டம் மட்டுமல்ல,

எதிர்க்கட்சித் தலைவர் Section 4 பற்றி சொன்னார்கள், on going projects,infrastructure என்று சொன்னீர்கள்,infrastructure harbour,pipeline,other actvities என்று கூறியிருக்கிறீர்கள். உள்கட்டமைப்புக்கு மட்டும் தான், ஆனால் தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகள் என்பது zine smelter,lron ore process plant,integrated steel plant and sponge iron plant.copper smelter,Aluinium smelter,Bone meal.processing of animal body parts,Tannery,other activities என்று ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறோம். அதில், எந்தெந்த தொழில் இந்த வேளாண் மண்டலத்தில் செய்யக்கூடாது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறோம். என்று கொடுத்தால் என்னவென்று கேட்டீர்களே, இதுதான் முக்கியம், தெளிவாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

Explorationஆய்வு செய்வது and drilling and extraction of oil and natural gas including coal bed,methane,shell gas and other simimilar hydrocarbons and Ship Breaking industries என்று தெளிவாக சொல்லிவிட்டோம். உறுப்பினர்களது முக்கியமான குரல், ஹைட்ரோ கார்பன் வரக்கூடாது என்பதுதான். டெல்டா மாவட்டம் என்பது அரியலூர், திருச்சி, கரூர் ஏன் சேர்க்கவில்லை என்று. முக்கியமாக ஹைட்ரோ கார்பனால் பாதிக்கப்படுவது கடலோர மாவட்டம்.

அந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவந்தால், அந்தக் கடல் நீர் உயர்ந்து டெல்டா மாவட்ட நிலங்கள் மூழ்கும் நிலை வரலாம் என்று ஆய்வறிக்கை இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைச் செய்தால் அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் கடற்கரையை ஒட்டியுள்ள டெல்டா மாவட்டங்களை இதில் சேர்த்திருக்கிறோம். டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், அதானி போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் அமைப்பார்கள் என்று சொன்னால், அதற்குத் தான் இந்தச் சட்டத்தில் பிரிவு 8-ல் Agriculture Development Zone Authority என்று கொடுக்கின்றோம்.

அந்த authority முழுக்க, முழுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் எந்த தொழில் செய்யலாம், யார் செய்யலாம், யார் செய்யக்கூடாதென்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, அதற்கொரு technical committee போட்டு அந்தக் committee -யின் பரிந்துரை குழுவிற்கு வந்தால் இந்தத் தொழிலால் விவசாயம் பாதிக்கப்படும், இதை அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகக் குழு உயர்மட்டக் குழுவிற்குப் பரிந்துரை செய்தால் அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்படாது. அதற்கான முழு அதிகாரம் இந்த Authority-க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, gas போன்றவை மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டது, ஆனால், நாளை மத்திய அரசாங்கம் கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற உங்கள் கேள்விக்கு – 1986-ல் இயற்றப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசாங்கம் தனக்கிருக்கும் அதிகாரத்தை, நீங்கள் இந்த அதிகாரத்தின்படி Water and Air Act செயல்படலாம் என்று மாநிலத்திற்கு delegate செய்திருக்கிறது. அந்த அதிகாரத்தின்படி,அந்த மாநிலத்தினுடைய சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றுத் தான் எந்தத் தொழிற்சாலையாக இருந்தாலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதிக்கும் என்ற நிலை இருந்தால் அதை தடை செய்வதற்கோ, அதை நிறுத்துவதற்கோ, முழு அதிகாரம் Water and Air Act-ன்படி மாநிலத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய எந்தத் தொழிற்சாலை வந்தாலும் அதை தடை செய்கின்ற அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தை delegation செய்திருக்கிறது. அதன்படிதான், ஸ்டெர்லைட் ஆலையை நாம் மூடியுள்ளோம், பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளோம். ஆகவே, நீங்கள் எந்தவிதமான அச்சமும் பட வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசாங்கம், ஹைட்ரோகார்பன் சம்பந்தமான பிரச்சினையில் தெளிவாகச் சொல்லி மாநில அரசாங்கத்தின் கையில் விட்டுவிட்டது.

இனி, அந்த அச்சம், துளி கூட இந்த மாமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையில்லை. தமிழக முதலமைச்சர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு 10-ஆம் தேதி கடிதம் எழுதி, கத்தியெடுக்காமல், கத்தாமல், சண்டை போடாமல், அமைதியாக, 18 ஆண்டு காலம் நீங்கள் அமைச்சரவையில் இருந்தும் சாதிக்க முடியாததை பத்தே நாட்களில் ஒரு கடிதத்தின் மூலம் சாதித்துக் காட்டியிருக்கிறார். மத்திய அமைச்சர் (அமைச்சரின் கடித்தை முழுமையாக படித்தார்) தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். ஆகவே, உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தில் எந்தவித அச்சமும் பட வேண்டியதில்லை.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.