தமிழகம்

ஓமந்தூரார் அரசு புதிய விருந்தினர் இல்லத்தில் ரூ.10 லட்சத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 19.2.2020 அன்று தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய அரசு விருந்தினர் இல்லத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.

பல்வேறு மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வருகை புரியும் அரசு விருந்தினர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் தங்குவதற்கு ஏதுவாக, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய அரசு விருந்தினர் இல்லத்தில் புதிதாக 10 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 2019-2020-ம் ஆண்டு பொதுத்துறை மானியக் கோரிக்கையில், முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய அரசு விருந்தினர் இல்லத்தில் பல்வேறு உடற்பயிற்சி உபகரணங்களுடன் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் க.சண்முகம், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ப.செந்தில்குமார், பொதுத்துறை (மரபு) கூடுதல் செயலாளர் ஆ.ர. ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.