தற்போதைய செய்திகள்

2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் கழகம் வெற்றி பெற அயராது பாடுபடுவோம் – கழக விவசாயப் பிரிவு சூளுரை

சென்னை

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற அயராது பாடுபட கழக விவசாய பிரிவு சூளுரைத்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக விவசாய பிரிவு மாநில நிர்வாகிகள், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கழக விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் தலைமை வகித்தார். செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இணை செயலாளர் வழக்கறிஞர் பெ.சீத்தாராமன் வரவேற்றார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், கழக அமைப்பு செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளரும், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், கழக அமைப்பு செயலாளரும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான இரா.துரைக்கண்ணு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், கழக மீனவர் பிரவு செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர். முடிவில் கழக விவசாய பிரிவு துணை செயலாளர் எம்.பாரதியார் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., தான் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருக்கரங்களில் ஒப்படைத்தார். கோடான கோடி கழக உடன்பிறப்புகளின் நம்பிக்கையாகவும், அடைக்கலமாகவும், படைக்கலனாகவும் வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மென்மேலும் வெற்றிப் பாதையில் வீருநடை போடுகிறது.

‘இந்த நாடும், இந்த இயக்கமும் இன்னும் மேன்மையுற வேண்டும்’ என்ற சிந்தனையை தன் அன்றாடப் பிரார்த்தனையாக கொண்டு நாட்டு மக்களின் நலன்களுக்காக தன்னையே அர்ப்பணித்து அரும்பணியாற்றிய இதயதெய்வம்
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வருகின்ற 24.2.2020 அன்று 72-வது பிறந்த நாளாகும். பல்வேறு வரலாற்று சிறப்புகளுக்கு சொந்தக்காரரான விவசாயப் பெருமக்களின் காவல் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை, ஏழை, எளியோர் மற்றும் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையிலும், குழந்தைகள் மற்றும் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையிலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது என கழக விவசாய பிரிவு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்து ஒட்டுமொத்த விவசாயிகளின் ஏகோபித்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று சிறப்பான நல்லாட்சி நடத்தி வரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழித்தோன்றலான, உழவர் மகன், விவசாயிகளின் பாதுகாவலர் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக விவசாயப் பிரிவு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், இதயபூர்வமான நன்றிகளையும் தெரிவித்து மகிழ்கிறது.

வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்தி வளமான தமிழகத்தை உருவாக்குவது கழக அரசின் கொள்கையாக உள்ளது. விவசாயிகள் இடர்பாடுகளில் இருக்கும்போது, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு எப்போதும் அவர்களுக்கு அரணாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக உணவு உற்பத்தியில் சாதனை படைத்து, அதற்காக மத்திய அரசின் “கிரிஷி கர்மான்” விருதினை தொடர்ந்து ஆறு முறை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு பெற்று சாதனை படைத்துள்ளதற்கு கழக விவசாயப் பிரிவு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், சிறப்பாக செயல்பட்டு கழக அரசை வெற்றிகரமாக நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கழக விவசாயப் பிரிவு தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்காக, குடிமராமத்து திட்டத்தின் மூலாக ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள், கால்வாய்கள், அணைகள் என அனைத்தையும் தூர் வாரியதின் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் ஆறுகளிலும், குட்டைகளிலும், குளங்களிலும், ஏரிகளிலும், அணைகளிலும், நீர் நிரம்பி வழிகின்ற சூழ்நிலையை உருவாக்கிய விவசாயியின் மகன், விவசாயிகளின் விடிவெள்ளி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக விவசாய பிரிவின் சார்பில் நன்றி பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழகத்தின் நீர் மேலாண்மையை செம்மைப்படுத்தவும், நீர் மேலாண்மையில் தமிழகம் தன்நிறைவு பெறவும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம், காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவேரி திட்டம் நூற்றாண்டு கனவு திட்டமான காவேரி- குண்டாறு இணைப்புத் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டப்பணிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற விவசாயிகளின் விடிவெள்ளி கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, கழக விவசாய பிரிவின் சார்பில் நன்றி பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழக வேளாண்மை துறைக்கு ரூ.11,894.48 கோடி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரித்தல், “இரண்டு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானம்” என உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வரும் கழக அரசையும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பாராட்டி மகிழ்கின்றது.

விவசாய பெருமக்களின் நலனுக்காக சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ.1,020 கோடி மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த, கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டியும், விவசாய பெருமக்கள் பலனடையும் வகையில் மாபெரும் விவசாய கண்காட்சி நடத்தி நாட்டு மக்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக விவசாயப் பிரிவு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை “மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக’’ ஆண்டுதோறும் கொண்டாடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழித்தோன்றலாய் திகழும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.

பெண் உரிமைகளை தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தவர், பெண்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களை உருவாக்கியவர், பெண் இனம் போற்றிய பெருந்தகையாளர், பெண்களை தலைநிமிர்ந்து வாழவைத்த தமிழகத்தின் வரலாற்று முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை, இனி ஒவ்வொரு ஆண்டும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டில் இனி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் நாள், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்றும், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும்போது 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார நிலையைக் கருதி சிறப்புப் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும் என்றும்; ஆண்-பெண் பாலின விகிதங்களை சரிசமமாகக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளும் மாவட்டங்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவித்தி ருப்பது, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அமைத்துத் தந்த கழக அரசு, பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதையே காட்டுகிறது. இதற்கு முழுமுதற் காரணமாய் விளங்கிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கழக விவசாயப் பிரிவு தனது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து மகழ்கிறது.

மக்களுக்காகவே அரும்பாடுபட்டு வாழ்ந்து மறைந்த இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மக்கள் நலனுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் தெய்வீக அருளாசியோடு, அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கழக அரசையும் சீரோடும், சிறப்போடும் வழிநடத்தி வருகின்ற அன்பின் வடிவம், அமைதியின் சிகரம், புன்னகை மன்னன் கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, வீரம் விளைந்த மண்ணில் பிறந்து வீணர்களை வீறுகொண்டு வேரறுக்க புறப்பட்ட தென்பாண்டி தென்றல் கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மதிநுட்பத்தையும், ராஜ தந்திரத்தையும், சிறப்பான தேர்தல் கூட்டணி மற்றும் அரசியல் வியூகங்களையும், மக்கள் நலப் பணிகளையும் மக்களிடத்தில் எடுத்துச் செல்வோம். வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 234/234 என்ற இலக்கை அடைவோம். அதற்கு அயராது பாடுபடுவோம், வெற்றி ஒன்றே நமது லட்சியம் என சூளுரைப்போம் என ஏகமனதாக கழக விவசாயப் பிரிவு சார்பில் தீர்மானம் நிறைவேற்றுகிறது.