தற்போதைய செய்திகள்

பூமி உள்ளவரை அம்மாவின் புகழ் மறையாது – அமைச்சர் கே.சி.வீரமணி புகழாரம்

வேலூர்

பூமி உள்ளவரை அம்மாவின் புகழ் மறையாது என்று அமைச்சர் கே.சி.வீரமணி புகழாரம் சூட்டினார்.

வேலூர் மேற்கு மாவட்ட கழக சார்பில் வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு கிராமத்தில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வதுபிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்தும்,  நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியாற்றுவது குறித்தும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அவைத்தலைவர் டி.கே. முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

அம்மாவின் வழியில் வந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான திட்டங்களை தீட்டி தமிழகத்தில் நல்லாட்சி செய்து வருகின்றனர். அம்மா அவர்கள் தேர்தலின்போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றுவிடாமல் நிறைவேற்றியுள்ளனர்.ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் சென்று சேரும் வகையில் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பட்டிதொட்டியெல்லாம் அம்மாவின் புகழ் பரப்ப வேண்டும். இதயதெய்வம் அம்மா அவர்கள் சொல்லியது போல்
நூறு ஆண்டுகளானாலும் கழகம் என்ற பேரியக்கம்தான் தமிழகத்தில் மக்கள் பணி செய்யும். பூமி உள்ளவரை புரட்சித்தலைவி அம்மாவின் புகழ் மறையாது. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம், மாணவர்கள், காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர், ஆதரவற்றோர், பார்வையற்றோர், முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி, கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் குட்லக் ரமேஷ், முன்னாள் அமைச்சர் ஆர் வடிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.தர்மலிங்கம், ஆவின் தலைவர் த.வேலழகன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள் எல்.கே.எம்.பி.வாசு, வி.ராமு, எஸ்.ஆர்.கே.அப்பு, வெட்டுவானம் எம்.புகழேந்தி,அறங்காவலர் குழு தலைவர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.