திருவள்ளூர்

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா பேரவை மற்றும் பென்டா பாலீஸ் பவுண்டேஷன் இந்தியா இணைந்து நடத்திய சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் பொன்னேரி ஸ்ரீதேவி ஆர்ட்ஸ் மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் பேசுகையில், எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு ஐடிஐ தொழிற்பயிற்சி மற்றும் கல்லூரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தரும் ஒரே தொகுதி பொன்னேரி தொகுதி தான். இந்த தொகுதியில் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடத்துவதில் அம்மாவின் அரசு மிகவும் பெருமை கொள்கிறது .

தமிழக அரசு திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் ஏழை எளிய மக்கள் பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் கல்லூரி வரை முடித்தவர்களுக்கு ஏற்பவாறு பயிற்சி கொடுத்து வருகின்ற வருகிறோம்.

வருகின்ற 14.3.2020 அன்று மாவட்ட ஆட்சியர், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா/பென்ஜமின், தமிழ்மொழி மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றோம் என்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார், நகர அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் சங்கர், மாணவரணி ராகேஷ், பிரதீபா ஷ்யாமளா, எஸ்பி அருள் ஜெஸ்ஸி என்கிற பாலா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்