சேலம்

நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் ஆலய குடமுழுக்கு விழா பணி தொடக்கம்…

சேலம்:-

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி நங்கவள்ளியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் மற்றும் சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது. வைணவ தலமான இக்கோயிலில் 1985-ம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியாரால் குடமுழுக்கு செய்யப்பட்டதாக கோயில் கல்வெட்டுகளில் பதியப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் எட்ப்பாடியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று 30 ஆண்டுகளுக்கு பிறகு லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு ஆகம விதிகள் படி திருகுடமுழுக்கு நடைபெறும் என்று அறிவித்தார்.

இதன்படி நேற்று திருப்பணிகள் குழு தலைவர் எமரால்டு வெங்கடாசலம் தலைமையில் வேதவிற்பன்னர்கள், உபன்யாசர்கள், பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க வைணவ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் ராஜா, தோராமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மாதையன், நங்கவள்ளி வனவாசி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் சீனிவாசன் மற்றொரு சீனிவாசன், சண்முகம் எம்.எம்.அழகரசன் உள்பட திருப்பணி குழுவினர், பக்தர்கள் கலந்து கொண்டனர்.