மதுரை

வெளிநாட்டு பயணத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை முதலமைச்சருக்கு பாராட்டு : விழா மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம்…

மதுரை:-

வெளிநாட்டு பயணம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி சாதனை படைத்த முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தமதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானித்துள்ளது.

மதுரையில் புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை இடத்தில் வரவேண்டும் என்ற அம்மாவின் கனவுகளையும், லட்சியங்களையும், நனவாக்கும் வண்ணம் வெளிநாட்டு முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்கும் வண்ணம் கடந்த 28-ந் தேதி முதல் லண்டன, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வெளிநாட்டு தொழில்முதலீட்டாளர்களை சந்தித்தும், ‘‘யாதும் ஊரே’’ என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்தித்து அவர்கள் மூலம் ரூ.5000 கோடிக்கு மேல் தொழில்முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய சகாப்தம் படைத்து இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி தந்த இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகம் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கத்தை தங்களின் தாரக மந்திரமாக கொண்டு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒரு புனித ஆட்சியை நடத்தி மக்கள் மத்தியில் எழுச்சிமிகு இயக்கமாக உருவாக்கி வருகின்றனர்.

நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய சக்தியாக கழகம் விஸ்வரூபம் எடுத்து வருவதை தாங்கி கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதை மக்கள் நம்பவில்லை. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்தால் திமுக சார்பில் பாராட்டு கூட்டம் நடத்துவேன் என்று விமர்சனம் செய்துள்ளார்.

நிச்சயம் ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வெளிநாட்டு பயணத்தை வெற்றி பயணமாக உருவாக்கிய முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.