தற்போதைய செய்திகள்

அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலியா பயணம் : சிட்னி பல்கலைக்கழக பேராசியர்களுடன் ஆலோசனை.

சிட்னி:-

ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்றுள்ள கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சிட்னி பல்கலைக்கழக பேராசியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அரசு முறை பயணமாக நேற்று ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்றார்.அங்கு உள்ள சிட்னிபல்கலைக்கழகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் பேராசியர் டாக்டர் டேவிட் எமெரி, இணை பேராசிரியர் டாக்டர் ஜான் ஹவுஸ் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் ஆரியர் புர்டி,டாக்டர் நவ்நீத் தண்ட் மற்றும் மெஹன் காத்கென் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அமைச்சருடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் சேவைகள் இயக்குநர் ஏ.ஞானசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.