சிறப்பு செய்திகள்

“முத்திரை பதித்த மூன்றாண்டு – முதலிடமே அதற்கு சான்று” தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி – தேனியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

தேனி

தேனி நகராட்சி, பழைய பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த “முத்திரை பதித்த மூன்றாண்டு – முதலிடமே அதற்குச் சான்று” என்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் நேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “முத்திரை பதித்த மூன்றாண்டு – முதலிடமே அதற்குச் சான்று” என்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சியில், தமிழக அரசின் வளர்ச்சித்திட்ட பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் குறித்தும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மற்றும் மாவட்டத்தில் நடைபெற்ற அரசின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும், மேற்க்கண்ட நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களை ஒருங்கிணைத்து, பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியினை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டனர். இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சி 2 தினங்கள் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பெரியகுளம் சார் ஆட்சியர் ச.சிநேகா, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மாவட்ட ஊராட்சித்தலைவர் க.பிரிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில்அண்ணா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.