தற்போதைய செய்திகள்

பழையனூரில் இலவச கண் சிகிச்சை முகாம் – பெருமாள்நகர் கே.ராஜன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளையொட்டி பழையனூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை பெருமாள்நகர் கே.ராஜன் தொடங்கி வைத்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கியும், ரத்ததான முகாம், மருத்துவ முகாம்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கழகம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு பழையனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி. கஸ்தூரிரங்கன் தலைமை வகித்தார். லட்சுமி நாராயணன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு முன்னாள் மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான பெருமாள் நகர் கே. ராஜன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் கண் புரை நீக்குதல், நீர்ப்பை அடைப்பு, கண் நீர் அழுத்தம், கண் நரம்பு நோய், சீரற்ற ரத்த சக்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட கண் சம்பந்தமான அனைத்து குறைகளுக்கும் நவீன சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் 85பேர் கண் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து பழையனூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் அரசப்பன், மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை இயக்குனர் அரசப்பன், உஷா நாதன், திவாகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் ப.உ.சத்யபிரகாஷ், பால் கூட்டுறவு சங்க தலைவர்கள் சு.நல்லூர் வீரமணி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் நவம்பட்டு துரைசாமி, கூட்டுறவு சங்க தலைவர் அச்சுதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குலசேகரன், பண்டிதபட்டு அய்யனார், கழக நிர்வாகிகள் சுரேஷ் பாஸ்கரன். நரியா பட்டு மோகன், பெருமாள், மூர்த்தி, பாவு பட்டு பழனி, பூக்கடை சீனு சீலபந்தல் சிவா தச்சம்பட்டு ரமேஷ், பொன்முடி, ரவிக்குமார், ஜெயராமன், வெங்கடேசன், பழனி, சசிகுமார், சரவணன், திருமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.