மதுரை

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கிரிக்கெட் போட்டி – வி.வி.ராஜன் செல்லப்பா பரிசு வழங்கினார்

மதுரை

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.

புரட்சித்தலவைி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 10,072 ரூபாயு, இரண்டாம் பரிசா 7,072 ரூபாயும், மூன்றாம் பரிசாக 4,072 ரூபாயு, நான்காம் பரிசாக 2,072 ரூபாயும் மற்றும் கேடயங்களையும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்த்து வந்து இளைஞரக்ளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறார். எனவே உங்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் அம்மாவின் அரசுக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் உங்களை போன்ற இளைஞர்களை திசை திருப்ப பல்வேறு பொய் பிரச்சாரங்கள் செய்வார்கள். அதை நீங்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம். இந்த அரசு உங்களை பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.