சிறப்பு செய்திகள்

பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்தநாள் விழா, திருவுருவ சிலைக்கு 15-ந்தேதி ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை…

சென்னை:-

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது. அதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் முதியோர் பங்கேற்குமாறு தலைமை கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி தலைமை கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 111-ஆவது பிறந்த நாளான 15.9.2019 – ஞாயிற்றுக் கிழமை காலை 10  மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு,
கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி  ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும்  மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும்
கழக நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.