தற்போதைய செய்திகள்

ஓட்டை படகில் ஸ்டாலின் பயணம் – பொள்ளாச்சி வி.ஜெயராமன் தாக்கு

கோவை

கோவை புறநகர் மாவட்டம், பொள்ளாச்சி நகர கழகம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளையொட்டி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், நகர கழக செயலாளருமான வி.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். அவர் சிறப்புரையாற்றுகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை சாதாரண ஏழைத் தொழிலாளி முதல் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் தினம்தோறும் திட்டங்கள் என தந்து கொண்டிருக்கிறது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான கழக ஆட்சி.கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் எங்கேயாவது தொடர்ந்து 2 மணி நேரம் மின்சார விளக்கு எரிந்தது என்று நிரூபிக்க முடியுமா.இருண்டு போன கடந்த கால திமுக ஆட்சியில் தொழிலின்றி தவித்தனர் தமிழக மக்கள்.

2011 தேர்தல் பிரச்சாரத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என்று தேர்தல் வாக்கறுதியளித்தார். தமிழக முதல்வர் ஆனவுடன் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டி இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ செய்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சட்டசபையிலே சந்திக்க திராணியில்லாமல் வெளிநடப்பு ஒன்றையே வாடிக்கையாக முகஸ்டாலின் செய்துவருகிறார்.நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாதம் ரூ 6,000, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுகவினர் வெற்றிபெற்றனர்.

வெற்றிபெற்ற பிறகு மக்கள் மன்றத்திற்கு வந்தார்களா? அவர்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? இல்லவே இல்லை. மு.க.ஸ்டாலின் மக்களுக்காக சட்டசபையில் ஏதாவது கோரிக்கை வைத்தாரா?திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்காக ஏதாவது திட்டங்களை கொண்டு வந்தார்களா? நிச்சயமாக கிடையாது.

மக்களை சந்திக்க வக்கில்லாத திமுக வெளிநடப்பு, வெளிநடப்பு என்பதை ஒன்றை மட்டும் வாடிக்கையாக செய்து வருகின்றது.ஒருகாலத்தில் அறிவுஜீவிகளும் ஜாம்பவான்களும், சிறந்த பேச்சாளரும் கொண்ட திமுக இருந்தது.
ஆனால் இன்று சொந்த மூளை இல்லாததால் முகஸ்டாலின் வடநாட்டைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர் என்பவரை 500 கோடி தந்து நியமிக்கிறார் என்றால் திமுகவில் யாருக்கும் ஆற்றலில்லை, அறிவு இல்லை என தமிழக மக்கள் பேசி வருகிறார்கள்.

500 கோடி தந்து தமிழகத்தில் அரசியல் செய்ய ஓட்டை படகிலே தற்போது முக ஸ்டாலின் பயணம் செய்து வருகிறார்.
எத்தனையோ அரசியல் சூழ்நிலையிலும் பெரியார், பேரறிஞர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மக்களை நம்பி, மக்களின் ஆலோசனைகளைப் பெற்று, மக்களின் நலனுக்காக, மக்கள் பணிகளை செய்தனர்.
ஆனால் தமிழக மக்களின் தலையில் மிளகாய் அரைக்க ரூபாய் 500 கோடி தந்து வடநாட்டை சேர்ந்த ஒருவரைக் கொண்டு வந்து மாய வலை விரிக்க பார்க்கிறார் மு.க. ஸ்டாலின்.

எம்ஜிஆர் வழியிலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தமிழக மக்களுக்காக சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.இங்கு ஜாதி சண்டையில்லை, மதக்கலவரம் இல்லை, வேலையின்மை திண்டாட்டம் இல்லை என சிறந்த ஆட்சியை தந்து அமைதிப் பூங்காவாக தமிழகத்தை திகழ்கிறது. தொழில்கள் சிறந்து விளங்குகிறது. இந்த ஆட்சி அம்மா தந்த ஆட்சி. வருகின்ற 2021ல் அதிமுக ஆட்சி அமைக்கும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும்.

சகோதர சகோதரர்களாக வாழ்ந்து வருகின்ற தமிழக மக்களை பிரிக்கப் பார்க்கிறார் மு க ஸ்டாலின். திமுகவின் சூழ்ச்சி தமிழக மக்களிடம் எடுபடாது. குடியுரிமை பிரச்சினை குறித்து சட்டசபையில் தமிழக முதல்வர் தெளிவான அறிக்கை வெளியிட்டார்.சிறுபான்மையினருக்கு ஒரு பாதிப்பும் ஏற்பட விடமாட்டோம். உங்களோடு நாங்கள் என்றும் இருப்போம் என்று உரையாற்றினார். அப்போது ஸ்டாலின் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் ஒருவரையாவது காட்டியிருப்பார். அதைச் செய்யாமல் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

கடந்த 98 திமுக ஆட்சியில் முஸ்லிம்கள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளானார்கள். சிறுபான்மையினருக்கு ஒரு துளி கூட பாதிப்பில்லாத ஒரு அற்புத ஆட்சிதான் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி. தமிழகம் அமைதியாக இருந்தால் ஸ்டாலினுக்கு பிடிக்காது. ஏனென்றால் அமைதியாக இருந்தால் 2021 லும் ஸ்டாலினின் கனவு நிறைவேறாது என்பதை அறிந்துதான் சிறுபான்மையினர் இடையே அச்சத்தை உருவாக்கி வருகிறார் உங்களுக்கு ஒரு தீங்கும் ஏற்படாது.

உங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அது எங்களுக்கும் தான். முதல்வராக வேண்டும் என்ற கனவில் வாழும் மு.க. ஸ்டாலின் அச்சத்தை ஏற்படுத்தி மதரீதியாக பிரிக்க பார்க்கிறார். சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக விளங்கும். உங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாங்கள் பாதுகாப்போம்.

இவ்வாறு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்டக் கழக அவைத் தலைவர் ஏ.வெங்கடாசலம், வேதை சிவசண்முகம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.விஜயகுமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாணவரணி மாவட்ட செயலாளர் ரகுபதி மற்றும் கழக நிர்வாகிகள் பிஆர்கே.குருசாமி, ஓ.கே.முருகன், ம.சுந்தரம், வடுகை கனகு, வீராசாமி, அருணாச்சலம், தினேஷ், அருளானந்தம், கிட்டான், சாய் சுரேஷ், மணிவண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.