தற்போதைய செய்திகள்

அம்மாவின் அரசுக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரிப்பு – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்

ஈரோடு:-

அம்மாவின் அரசுக்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு புறநகர் மாவட்டம், பவானி தொகுதியில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்றார்.

அப்போது ஈரோடு புறநகர் மாவட்டம், பவானி தொகுதி கவுந்தப்பாடியில் மலிவு விலை குடிநீர் இயந்திரத்தினை தொடங்கி வைத்தார். கவுந்தப்பாடி நால்ரோடு, ஜெ.ஜெ.நகர், கவுந்தப்பாடி புதூர் பகுதிகளில் கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். கவுந்தப்பாடி புதூர், வேலம்பாளையம் பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிழற்குடைகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார். கவுந்தப்பாடி அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கிளைச் செயலாளர் ஜீவா ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி 72 மகளிருக்கு சேலைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என நாட்டு மக்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்தாலும் மக்கள் மனதில் என்றென்றும் அம்மா அவர்கள் வாழ்ந்து வருகிறார். அம்மாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அம்மாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். அம்மாவின் நலத்திட்டங்கள் இல்லாத வீடுகளே இல்லை. திட்டங்கள் வாயிலாக ஒவ்வொருவரின் இல்லங்களிலும் அம்மா அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும், 72 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. பெண் சமுதாயத்தை தலைநிமிர செயதவர் அம்மா. அம்மாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏராளமானோர் உயிர் பிழைத்துள்ளனர். விவசாயியான முதலமைச்சர் நாட்டை ஆள்வதன் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்கிறது. திமுகவினரால் அம்மா ஆட்சியின் திட்டங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். ஸ்டாலின் பொய் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது. அம்மாவின் அரசிற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மண்டல போக்குவரத்துப் பிரிவு செயலாளர் ஜீவா ராமசாமி, டாக்டர் எம். மனோகரன், ஜீவா சுகுமார், கவுந்தப்பாடி கிளைச் செயலாளர் ஜீவா ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் ஏ.சரவணன், வழக்கறிஞர் வரதராஜ், அஸ்ரப் அலி, தங்கராசு, மணி சந்தோஷ், லோகு கிருஷ்ணன், விஸ்வநாதன், விஜயலட்சுமி, விஜய், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபிகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.