தமிழகம்

மின்சாரம் தாக்கியும்- பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதலமைச்சர் உத்தரவு

சென்னை

மின்சாரம் தாக்கியும், பாம்புகடித்தும் உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி ஒப்பாயி, ஆறுமுகம் என்பவரின் மகன் ராமமூர்த்தி மற்றும் ராமமூர்த்தி என்பவரின் மகன் குணசேகரன் ஆகிய மூன்று நபர்களும் விவசாய நிலத்தில் உரம் தெளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மங்கலம் குறுவட்டம் வடபட்டி கிராமத்தை சேர்ந்த புளுகாயம்மாள் என்பவரின் மகன் மாரிச்செல்வம் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் மற்றும் நகரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சண்முகம் மற்றும் அவருடைய மகன் முகேஸ்வரன் ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ஜம்புகுளம் மதுரா தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரேம்குமார் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், கலவை கிராமத்தை சேர்ந்த குட்டி என்பவரின் கணவர் சந்துரு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஆம்ஸ்ட்ராங் சாமுவேல் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ஒத்தக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் பிரசாத் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருமீயச்சூர் கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரின் மகன் பாலசுப்ரமணியன் மேற்கூரை அமைக்கும் பணியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், ராஜன்நகர் கிராமத்தை சேர்ந்த சுப்பையகவுடர் என்பவரின் மகன் முத்துராஜ் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உல்லத்தி கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மனைவி மணி, கிருஷ்ணன் என்பவரின் மகன் குமார் மற்றும் கண்டமுத்து என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் ஆகிய மூன்று நபர்களும் மின்கம்பி அறுந்து கிடந்ததை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், செங்கீரை சரகம், அரிமளம் கிராமத்தை சேர்ந்த இந்திரா என்பவரின் கணவர் ராஜேந்திரன் மின்பெட்டியிலிருந்து, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் குறுவட்டம், அரங்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் ஆறுமுகம் என்பவர் மின்மாற்றி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி மின்மாற்றியில் பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், அச்சங்குட்டம் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவரின் கணவர் ஐயங்கண்ணு என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், தெற்கு கீரனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் ராமைய்யன் என்பவரின் மகன் சதானந்தம் அறுந்து கிடந்த மின் கம்பியினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், மேட்டமலை கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் மனைவி கல்பனா என்ற கனகலட்சுமி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தை சேர்ந்த லெட்சுமி என்பவரின் மகன் மகேந்திரன் மற்றும் மருமகள் சத்யா ஆகிய இருவரும் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், நைனாங்குளம் கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி என்பவரின் மகன் கருப்பையன் என்பவர் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் அருள்முகன் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 25 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.