தமிழகம்

அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்- தமிழக அரசு உத்தரவு

சென்னை

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மை செயலாளர் ஸ்வர்ணா, அனைத்து துறை முதன்மை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இனி அரசு பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும். பெரும்பாலான அரசு அலுவலர்கள் பணிநேரத்தின் போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் தொடந்து வருகிறது.

அது போன்ற புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது. அடையாள அட்டை அணிவது தொடர்பாக துறை ரீதியான செயலாளர்களும் மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே அரசு விதிமுறைகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.