தற்போதைய செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது அம்மா அரசு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

ஈரோடு

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது அம்மாவின் அரசு என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு புறநகர் மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பி.கே.காளியப்பன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நல்லாட்சி நடத்தி வருகின்றனர். சில பேர் கழகத்தை ஆட்டி விடலாம், அசைத்து விடலாம் என நினைக்கிறார்கள். கழகத்தை வெல்ல யாராலும் முடியாது. மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கம் கழகம் மட்டுமே. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்திய துணை கண்டமே வியக்கும் வண்ணம் நல்லாட்சி நடத்தினார்.

தொட்டில் குழந்தை திட்டம் மூலம் பெண் குழந்தைகளின் உயிரை காத்தார். அன்னை தெரசா அம்மாவை பாராட்டினார். காவேரி நதி நீர் பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டியவர் அம்மா. காவேரி நதி நீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்தவர் அம்மா. அம்மாவின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்களை தூர் வார செய்து குடிநீர் பிரச்சினையை தீர்த்தார்.

மக்கள் நலனுக்கு எதிரான இயக்கம் தி.மு.க.. அம்மாவின் வழியில் மக்கள் நலன் காக்கும் நல்லாட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது.தி மு க வின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது. இஸ்லாமியர்களை பொறுத்த வரை திமுக ஆட்சியில் டிசம்பர் 6-ந்தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்தது. ஆனால் புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் அவ்வாறு நடைபெறவில்லை. சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது அம்மாவின் அரசு. சிறுபான்மை மக்களை பேணி காக்கும் அரசு அம்மாவின் அரசு. இஸ்லாமிய பெருமக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடர்பாடு இருந்தால் முதல் குரல் எழுப்புவேன் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பிக்கள் வி.சத்தியபாமா, கே.கே.காளியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.கந்தசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரன், பிரினியோ கணேஷ், எலத்தூர் பேரூராட்சி செயலாளர் சரவணன், டி.என்.பாளையம் லூர்துசாமி, மண்டல போக்குவரத்து பிரிவு தொழிற்சங்க செயலாளர் ஜீவா ராமசாமி, ஜீவா சுகுமார், ஜீவா செங்குட்டுவன், குமரவேல், தாளவாடி ராமசாமி, ஜி.கே.செல்வராஜ், சையத்யூசுப், கருப்பண்ன கவுண்டர், ஈஸ்வரமூர்த்தி, சாரதா செல்வராஜ், வழக்கறிஞர் கங்காதரன், ஈ.ஆர்.வேலுமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.