தற்போதைய செய்திகள்

மருத்துவக் கல்லூரிகள் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தரும் முதல்வருக்கு கழக அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்

மதுரை

11 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் பெற்று தெற்கு ஆசியாவின் மருத்துவ தலைநகரமாக ஒட்டு மொத்த தமிழகத்தை உருவாக்கி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் முதல்வருக்கு கோடான கோடி நன்றி தெரிவிக்கும் வகையில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மாபெரும் எழுச்சிமிகு வரவேற்பை அளிக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப வியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தெற்கு ஆசியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழகத்தை உருவாக்கி ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று அதற்கு அடிக்கல் நாட்டிட ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளுர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தரும், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை கோடான கோடி நன்றி தெரிவித்து, மாபெரும் வரவேற்பு அளிக்க உறுதியேற்கிறது.

புறநானூற்று தமிழ் மண் பொற்காலத்தால் ஜொலித்திட இம்மண் பயனுற போராடும், புன்னகை போராளி, குடிமராமத்து நாயகர், உழவர் வீட்டுப்பிள்ளை, உலக தமிழ் இனம் வாழ்த்தும் சரித்திர சாதனைகளின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக அரசின் வெற்றி தேரோட்டத்திற்கு அச்சாணியாக திகழும் பாண்டிய நாட்டுத்தங்கம், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வாழ்த்து கோஷங்களால் பூத்துக்குலுங்க செய்திட, தெய்வத்திருமகளாம், அம்மாவின் திருநாமம் கொண்ட சிப்பாய் படையாம் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை தொண்டர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கும் வண்ணம் மாபெரும் எழுச்சிமிகு வரவேற்பை அளித்திட உளமார உறுதி ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

இந்திய அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது தெற்கு ஆசியா நாடுகளில் தமிழகத்தை ஒரு சிறந்த மருத்துவ தலைநகராக உருவாக்கும் வண்ணம் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று அதற்கு அடிக்கல் நாட்ட வருகை தரும் முதலமைச்சருக்கு கழக அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து தேர்தல் காலங்களில் மிகப்பெரிய வெற்றியினை கழகத்திற்கு பெற்று தர கழக அம்மா பேரவை சார்பில் இரவு பகல் பாராது அயராது உழைப்போம் என்று சூளுரை மேற்கொள்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி., சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், கழக அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கம், மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ, மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட கழக துணை செயலாளர்கள் அய்யப்பன், பஞ்சம்மாள், மாவட்ட கழக இணை செயலாளர் பஞ்சவர்ணம், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், ராஜா, முருகேசன், அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கொரியர் கணேசன், குமார், அழகுராஜா, நெடுமாறன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.