தற்போதைய செய்திகள்

பழையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டம் – அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் பழையனூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு
47 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.16 லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட ஆவின் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

மேலும் விரதமிருந்த பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டும், முடிக்காணிக்கை செலுத்தியும், மடிப்பிச்சை எடுத்தும் அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மண்டல இணை ஆணையாளர் செந்தில்வேலன்,. உதவி ஆணையர் ஜான்சிராணி, தக்கார்/ ஆய்வாளர் என்.ஜெயந்தி, செயல் அலுவலர் ஹரிஹரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் சத்ய சிவகுமார், மாவட்ட பாசறை செயலாளர் கஜேந்திரன், ஆவின் துணைத்தலைவர் பாரி பாபு, ஒன்றிய கழக செயலாளர் குமாரசாமி, ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளர் சக்கரபாணி, ஊராட்சி கழக செயலாளர் திருமுருகன், கிளை செயலாளர் ஏழுமலை, அம்மா பேரவை தெய்வீகன், ரவிக்குமார், ஷங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.