கோவை

3 ஆண்டுகளாக ஸ்டாலின் பலிக்காத கனவு காண்கிறார் – நடிகர் ரவிமரியா கடும் தாக்கு

கோவை

கோவை புறநகர் மாவட்டம் ஆனைமலை மேற்கு ஒன்றியம் சார்பில் திவான்சாபுதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரைப்பட நடிகரும், நட்சத்திர பேச்சாளருமான ரவிமரியா பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நமது கழகத்திற்கு இரட்டை இலை சின்னத்தை தந்தார். புரட்சித்தலைவி அம்மா ஒரு தீர்க்கதரிசி எனக்கு பின்னால் கட்சியை வழிநடத்த தமிழக முதல்வர் ஒரு இலையாகவும், துணை முதல்வர் இன்னொரு இலையாகவும் இருக்கவேண்டும் என்று தந்தார்.

கழக தொண்டர்களை பார்க்கும்போது அம்மா என்று சொல்லும்போது அவர்களிடம் கண்ணீர் துளிகளை பார்க்கிறேன். நாவில் ஒரு நடுக்கத்தை பார்க்கிறேன். அந்த வார்த்தை சாதாரண வார்த்தை அல்ல. ஒவ்வொரு தமிழக மக்கள் மனதிலும் அம்மா வாழ்கிறார் என்பதை உணர்த்தும் வார்த்தை.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். இங்கு புரட்சித்தலைவி அம்மா வளர்த்தது இபிஎஸ், ஓபிஎஸ் எனும் 2 பிள்ளைகள். அந்த ஒவ்வொரு பிள்ளையும் 16, 16 என 32 அடி பாய்கிறார்கள்.உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு வரும். சில பலிக்கும். சில பலிக்காது. அதுபோல ஸ்டாலினுக்கு வருவது எப்பொழுதுமே பலிக்காத கனவு மட்டுமே வரும். இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்வராகலாம் என்று தினந்தோறும் கனவு காண்கிறார். அடுத்தநாள் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பேட்டியளிக்கிறார். இப்படி 3 ஆண்டுகளாக பலிக்காத கனவை கண்டு வருகிறார். இன்னும் அந்த கனவின் நம்பிக்கை குறையாமல் பகல் கனவு காண்கிறார். அது எப்போதுமே பலிக்காது.

இவ்வாறு திரைப்பட நடிகர் ரவி மரியா பேசினார்.