கடலூர்

வரலாற்று பிழை செய்த ஸ்டாலினை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் பேச்சு

கடலூர்

சிறப்பு பாதுகாப்பு வேளாண் மண்டல தீர்மானத்தை ஆதரிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து வரலாற்று பிழை செய்த ஸ்டாலினை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், கிள்ளை பேரூர் கழக செயலாளர் விஜயன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.இந்த பொதுக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டது கிடைக்கும் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் காவேரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு பாதுகாப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளார். தமிழக விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் வேளாண் உற்பத்திக்கு உத்தரவாதமாக விளங்கும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காமல் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வெளிநடப்பு செய்து வரலாற்று பிழை செய்துள்ளார். இதை தமிழக மக்கள் என்றென்றும் மன்னிக்க மாட்டார்கள்.

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வசதி வேண்டும் என்று சட்டசபையில் நான் கோரிக்கை வைத்தேன். உடனடியாக சிடி ஸ்கேன் வசதியை செய்து தந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர். சாலை வசதி வேண்டும் என்று கேட்டவுடன் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாயை சிதம்பரம் நகராட்சிக்கு அள்ளித்தந்து சாலை வசதிகள் மேம்பட செய்தவர் உள்ளாட்சித்துறை அமைச்சர். அதேபோன்று இந்த ஆட்சியில் மக்களுக்கு என்ன வசதிகள் தேவை என்று கேட்டாலும் உடனே நிறைவேற்றித் தரும் பொற்கால ஆட்சியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று வெற்றிக்கனியை முதலமைச்சரிடம் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் தேன்மொழிகாத்தவராயசாமி, மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, பேரூர் கழக செயலாளர்கள் மாரிமுத்து, ஆறுமுகம், கூட்டுறவு சங்க தலைவர்கள் வசந்த், தனகோவிந்தராஜன், சந்தர் ராமஜெயம், சிவ.சிங்காரவேலு, ராஜேந்திரன், பாஸ்கர், முருகையன், கிருஷ்ணகுமார், கண்ணன் வேணுகோபால், வீரபாண்டியன், பாவாடை, கனகராஜன், இளங்கோவன், செல்வரங்கன், சண்முகமூர்த்தி, வேல்முருகன், வி.ஏ.கணேஷ், ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் சீனு திருமுருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தமிழரசி, ஆனந்தஜோதி, வசந்தி, பாஸ்கரன், தவமணி, ஜெயந்தி, தாமரைச்செல்வி, ராஜேஸ்வரி ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் தன.ஜெயராமன் நன்றி கூறினார்.