தற்போதைய செய்திகள்

அம்மா வாக்குபடி கழக அரசு 100 ஆண்டுகள் நீடிக்கும் – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு

அம்மா வாக்குபடி கழக அரசு 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு புறநகர் மாவட்டம் சத்தியமங்கலம் நகர கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் வடக்கு பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வி.சி.வரதராஜ், சி.என்.மாரப்பன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இதில ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன், தலைமை கழக பேச்சாளர் கோவை புரட்சிதம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

மக்களால் நான், மக்களுக்காக நான் என்று வாழ்நாளெல்லாம் மக்கள் நலனுக்காக வாழ்ந்து காட்டியவர் அம்மா. அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சி நடத்தி வருகிறார்கள். அம்மாவால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். அம்மாவின் திட்டங்கள் என்றென்றும் பேசப்படும். அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் கூறியதுபோல கழக அரசு 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்.

விவசாயிகள் நலனை காக்க காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள முதலமைச்சருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. இதை பொறுக்கமுடியாமல் திமுகவினர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். சேலம் தலைவாசலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்களை தன்னம்பிக்கையுடன் வாழ செய்தவர் அம்மா. விலையில்லா வெள்ளாடுகள், கறவை மாடுகள், விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் ரவுடியிசம், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து என தமிழக மக்கள் வேதனையில் வாழ்ந்தனர். அம்மா ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது. திமுக ஆட்சியில் கேபிள் டிவி நடத்தி திமுக குடும்ப தொலைக்காட்சியினர் 20,000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை கொள்ளையடித்தனர். ஊழலுக்காகவே செயல்படும் கட்சி. தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றியது.

பின்னர் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு மக்கள் படுதோல்வியை பரிசாக அளித்தனர். உள்ளாட்சியில் நல்லாட்சி நடைபெற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழக அரசுக்கு நல்லாதரவு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி. விரைவில் நடைபெறும் நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களிலும் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை மாபெரும் வெற்றிபெற செய்யுங்கள். வீடு தோறும் நலத்திட்டங்களை வழங்கி வரும் அம்மாவின் அரசுக்கு நல்லாதரவு தாருங்கள். நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கும் கழக அரசுக்கு பொதுமக்கள் நல்லாதரவு வழங்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் பி.சிதம்பரம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எம்.பஷீர், நாராயணன் சிவராஜ், டி.ராமசாமி, என் பி.ரகு, தேவமுத்து, தமிழ்செல்வி, துரைசாமி, முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் டி.கே.ஈஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து